684இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

பாங்கி தலைவியைப் புகழ்தல்:



சிறந்தார் புகழ்தரும் தீம்புனல் ஊரன்செய் தீமைஎல்லாம்
மறந்துஆர்வம்எய்திவணங்குதலால்இவள்வாணன் தஞ்சை
நிறம்தா ரகைஅன்ன நித்திலம் போலும்நன் னீள்குலத்தில்
பிறந்தார் நிறைந்தகற்பு ஓர்வடி வேபெற்ற பெற்றியளே.

தஞ்சை 407

எனவும் வரும்.

184

      [சான்றோர் புகழும் புனல் ஊரனாகிய தலைவன் செய்த தீமைகளை
எல்லாம் மறந்து விருப்பம் எய்தி வணங்குதலால், இத்தலைவி வாணனது
தஞ்சையில் ஒளி வீசும் விண்மீன்களைப் போன்று ஒளிரும்
முத்தைப்போன்ற நல்ல சிறந்த குலத்தில் பிறந்தவர்பால் நிறைந்த
கற்புஎல்லாம் திரண்டு ஒருவடிவு எடுத்தாற்போலும் தன்மையள் ஆவள்.]

184

பரத்தையின் பிரிவின் விரி


557    மூன்று சூத்திரத்து மொழிந்தவை எல்லாம்
      ஆன்ற பரத்தையின் அகற்சியின் விரியே.


     இது பரத்தையிற்பிரிவின் விரி இத்துணைத்து என்கின்றது.

     (இ-ள்) காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம் இவ்

விறைவிக்கு என்றல் முதலாகிப் பாங்கி மனைவியைப் புகழ்தல் ஈறாகச்
சொல்லப்பட்டன எல்லாம் பரத்தையின் பிரிவின் விரியாம் என்றவாறு.

     வாயில் வேண்டல் முதலாக நான்கு வகைக்கும் ஏற்குமாறு அறிந்து
கொள்க.

185
 

ஒத்த நூற்பாக்கள்


தலைவன் கூற்று:


      ‘பயல்கெழு துணைஅணை புல்லிய புல்லாது
      உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப்