அகத்திணையியல்--நூற்பா எண் 185685

புல
 

 

       புல்குஎன முன்னிய நிறை அழி பொழுதின்
      மெல்லென் சீறடி புல்லிய இரவினும்
      உறல்அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளை
      பிறபிற பெண்டிரின் பெயர்த்தற் கண்ணும்
      நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும்
      சென்றுகை இகந்துபெயர்த்து உள்ளிய வழியும்
      காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும்
      தான் அவள் பிழைத்த நிலையின் கண்ணும்' ..

தொல். பொ. 146


தலைவி கூற்று:


      ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
      நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ
      நளியின் நீக்கிய இளிவரு நிலையும்
      புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
      அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி
      இயன்ற நெஞ்சம் தலைப்பெயத் தருக்கி
      எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்
      தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி
      எங்கையர்க்கு உரைஎன இரத்தற் கண்ணும்
      செல்லாக் காலைச் செல்கஎன விடுத்தலும்
      காமக் கிழத்தி தன்மகத் தழீஇ
      ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும்...
      தந்தையை ஒப்பர் மக்கள் என்பதனால்
      அந்தமில்சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்....
      கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி
      அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
      காதல் எங்கையர் காணின் நன்றுஎன
      மாதர் சான்ற வகையின் கண்ணும்
      தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
      மாயப் பரத்தை உள்ளிய வழியும்..
.