686இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

       காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய
      தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்
      கிழவோள் செப்பல் கிழவது என்ப.'

தொல். பொ. 147

தோழி கூற்று:

      ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை
      அடங்கக் காட்டுதல் பொருளின் கண்ணும்
      பிழைத்துவந்து இருந்த கிழவனை நெருங்கி
      இழைத்தாங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும்....
      புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்....
      மாண்நலம் தாஎன வகுத்தற் கண்ணும்
      பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்
      உணர்ப்புவயின் வாரா ஊடல்உற் றோள்வயின்
      உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று
      தான்வெகுண்டு ஆக்கிய தகுதிக் கண்ணும்
      அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
      வெண்மைக் காலத்து இரக்கத் தானும்
      பாணர் கூத்தர் விறலி என்றிவர்
      பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்
      நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக்
      காத்த தன்மையின் கண் நின்று பெயர்ப்பினும்...
      தோழிக்கு உரிய என்மனார் புலவர்.'

 தொல். பொ. 150

      ‘உணர்ப்புவரை இறப்பினும் செயற்குறி பிழைப்பினும்
      புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய.'

தொல். பொ. 156

       ‘புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்
       சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய.'

தொ. பொ. 157

       ‘பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி
       மடத்தகு கிழமை உடைமை யானும்
      அன்புஇலை கொடியை என்றலும் உரியள்,'

தொல். பொ. 158