அகத்திணையியல்--நூற்பா எண் 185687

‘அவன்குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி
அகன்மலி ஊடல் அகற்சிக் கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.'

தொல். பொ. 159


‘காமக் கடப்பினுள் பணிந்த கிளவி
காணுங் காலை கிழவோற்கு உரித்தே
வழிபடு கிழமை அவட்குஇயல் ஆன.'

தொல். பொ. 160


‘அருள்முந்து உறுத்த அன்புபொதி கிளவி
பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே.'

தொல். பொ. 161


‘மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
தம்முள ஆதல் வாயில்கட்கு இல்லை.'

தொல். பொ. 162


‘மனைவி முன்னர்க் கையறு கிளவி
மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே.'

தொல். பொ. 163


‘எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப.'

தொல். பொ. 178

‘மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
நினையுங் காலை புலவியுள் உரிய.'

தொல். பொ. 227


‘பரத்தையின் பிரிவே நிலத்திரிபு இன்றே.'

இறை. அக. 42


‘கற்பினுள் பிரிந்தோன் பரத்தையின் மறுத்தந்து
அறப்பொருள் படுப்பினும் வரைநிலை இன்றே.'

இறை. அக. 43


‘புகழும் கொடுமையும் கிழவோன் மேன.'

இறை. அக. 44


‘உணர்ப்புவயின் வாரா ஊடல் தோன்றின்
புலத்தல் தானே கிழவற்கும் வரையார்.'

இறை. அக. 45


‘கண்டவர் கூறல் காதல் தோழி
பொறை உவந்து உரைத்தல் பொதுப்படக் கூறி
வாடி அழுங்கல் மாறுகொண் டவனொடு
கனவுஇழந்து உரைத்தல் விளக்கொடு வெறுத்தல்
வாரம் பகர்ந்து வாயில் மறுத்தல்
பள்ளிஇடத்து ஊடல் பணிமொழி ஆடல்
செவ்வணி விடுக்க இல்லோர் கூறல்