அகத்திணையியல்--நூற்பா எண் 185,186689

எண

       எண்ணாறு ஒன்றுஇவை பரத்தையின் பிரிவுஎனப்
       பண்ஆர் மொழியாப் பகர்ந்திசி னோரே.'


திருக்கோவை, மு. வீ. கற். 9


        முழுதும் --
 
                           ந. அ. 208



       வாயில் மறுத்தலும் வாயில் கூறலும்
       தோழி மாற்றலும் புலவி தோற்றலும்
       கிழவன் புலத்தலும் கிழவி புலத்தலும்
       விழைகுநன் விழையான் இவன்என விளம்பலும்
       தாய்கண்டு உரைத்தலும் தாங்கிய காதலின்
       ஆயின பிறவும் ஆயிடைப் பிரிவே.'

த. நெ. வி. 25


       ‘முறைபெறச் சூத்திரம் மூன்றினும் உரைத்தவை
       அறைதரு பரத்தையின் அகற்சியின் விரியே.'

மா. அ. 105
185

 

ஏனைய பிரிவுகளின் வகை


558    பிரிவுஅறி வுறுத்தல்1 பிரிவுஉடன் படாமை2
       பிரிவுஉடன் படுத்தல்3 பிரிவுஉடன் படுதல்4
       பிரிவுழிக் கலங்கல்5 வன்புஉறை6 வன்பொறை7
       வருவழிக் கலங்கல்8 வந்துழி மகிழ்ச்சிஎன்று
       ஒருமையின் கூறிய ஒன்பது வகைய
       கல்வி முதலா எல்லாப் பிரிவும்.


நிறுத்த முறையானே, இது கல்வி முதலிய பிரிவின் வகை இத்துணைத்து
என்கின்றது.

     (இ-ள்) பிரிவு அறிவுறுத்தல் முதலாக வந்துழி மகிழ்ச்சி ஈறாகக் கூறப்பட்ட ஒன்பது வகையினை உடையவாம், கல்வி முதலாகிய ஐந்துவகைப் பிரிவும் என்றவாறு.

ஒருமையின் கூறுதல்--ஒரு தன்மைபற்றிக் கூறுதல்.
87