அகத்திணையியல்--நூற்பா எண் 186693

      போயுழிக் கலங்கல்வன் புறையே வன்பொறை
      வரும்வழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சிஎன்று
      ஒருதலை யாக உரைத்தஎண் வகைய
      அருள்மலி காவல் முதலிய ஐந்தே'
           மா. அ. 106]


கல்விப் பிரிவு பாங்கிக்குத் தலைமகன் அறிவுறுத்தல்:
 

சீர்அளவு இல்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்
ஆரளவுஇல் லாஅள வும்சென் றார் அம்பலம் துன்னிநின்ற
ஓர்அளவு இல்லா ஒருவன் இருங்கழல் உன்னினர்போல்
ஏர்அளவு இல்லா அளவினர் ஆகுவர் ஏந்திழையே.
     திரு. 308

எனவும்
,

      [தலைவியே! எல்லையற்ற கல்வியாகிய மேருமலையின் எல்லைவரை
சென்ற நம் தலைவர், அம்பலத்து நின்ற சிவபெருமானின் திருவடிகளை
அறிந்து நினைந்தவர் போல், நன்மைக்கு எல்லை இல்லாத திருவினராவர்.]


கல்விப் பிரிவு
கல்விப் பிரிவு தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல் :
 

வீதல்உற் றார் தலைமாலையன் தில்லைமிக் கோன்கழற்கே
காதல்உற் றார்நன்மை கல்விசெல் வீதரும் என்பதுகொண்டு
ஒதல்உற் றார்உற்று உணர்தல்உற் றார்செல்லல்மல் அழல்கான்
போதல்உற் றார்நின் புணர்முலை உற்ற புரவலரே.

திரு. 309

எனவும்,

     [செல்வியே! ‘இறந்த தேவர்களின் தலைமாலையை அணிந்த

தில்லைக்கண் உள்ள சிவபெருமானுடைய திருவடிகளிலேயே அன்புற்றாரது
நன்மையைக் கல்வி தரும்' என்பது கருதி, ஓதுதலான் மிக்கவரை அடைந்து
எல்லா நூல்களையும் உணர்தலுற்று, நின் புணர்நகிலைச் சேர்ந்த தலைவர்,
இன்னாமையைச் செய்யும் வெய்ய பாலையி்ல் போதலை நினைத்தார்.]