694இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

கல

கல்விக்குப் பிரிந்துழிக் கார்ப்பருவம் கண்டு
தலைவி வருந்தல்:

 

யாணர்க் குழல்மொழி என்செய்கு வேன்கல்வி எல்லைஎல்லாம்
காணப் பிரிந்தவர் காண்கில ரால்கடல் மேய்ந்துதஞ்சை
வாணர்க்கு எதிர்ந்தவர் மங்கையர் போலும்என் வல்உயிரின்
ஊண்அற்பம் என்னஎண் ணாவரும் மேகம் உருமுடனே.

தஞ்சை. 409


எனவும்
,

     [புதுப்புது இசையைப் பரப்பும் குழல் போலும் மொழியினை உடைய
தோழியே! கடல்நீரைஉட்கொண்டு, தஞ்சைவாணனை எதிர்த்த பகைவர்தம்
மனைவிமார்களைப் போல நீர் உகுத்தற்கு, என் உயிர் மெல்லிது என்று
எண்ணாது, கார்மேகம் இடியுடன் வருகின்றது. கல்வியின் எல்லையைக்
காண்பதற்கு ஓதற்பிரிவை மேற்கொண்டுள்ள தலைவர் இக் கார்மேகத்தைக்
காண்பார் அல்லர். யான் என் செய்வேன்?]
 

கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி
ஆற்றுவித்தல்:
 

திருமால் அறியாச் செறிகழல் தில்லைச்சிற் றம்பலத்துஎம்
கருமால் விடைஉடை யோன்கண்டம் போல்கொண்டல் என்திசையும்
வருமால் உடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர்
பொரும்மால் அயில்கண்நல் லாய்இன்று தோன்றும்நம்
பொன்னகர்க்கே.


திரு.326


எனவும்
,

     [திருமாலும் அறியாத திருவடியை உடையவனாய்ச் சிற்றம்பலத்தான்
ஆகிய இடபவாகனனுடைய கழுத்தைப் போல மேகம் இருண்டு
எட்டுத்திசைக்கண்ணும் வாராநின்றது. அதனால், வேற்கண் தோழி!
தம்முடனே நிலைபெற்ற கல்வி பொருந்துதலைக் காண, நம்மை மணந்த
தலைவரது தேர் இன்றே நம் இல்லின்கண் வந்து சேரும்.