அகத்திணையியல்--நூற்பா எண் 187695

     திருக்கோவையாரில் இப்பாடல் துணைவயிற் பிரிவின் கண்ணதாய்
உள்ளது. இங்கு யாம் ஓதற்பிரிவிற்கு ஏற்பப்பொருள் கொண்டுள்ளாம்.]


காவற் பிரிவு
காவல்பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்:


அல்லவை நீக்கி அறப்புறம் காக்கவும் ஆதுலர்கள்
சொல்லுவ கேட்டு அவர் துன்பம் துடைக்கவும் சூழ்கடல்பார்
எல்லையின் ஒன்றைஒன்று இன்னா செயும்இகல் வாட்டுதற்கும்
செல்லுவ தேகடன் ஆம்நாடு காவல் சிறந்தவர்க்கே.

அம்பி 519
 

எனவும்,

     [நாடுகவலில் சிறந்த தலைவனுக்கு, தீயவற்றை நீக்கி அறப்புறத்தைக்
காப்பாற்றவும், நோயாளிகள் சொல்லுவனவற்றைக் கேட்டு அவர்களது
துன்பத்தைப் போக்கவும், உலகில் இன்னாசெய்யும் பகைமையைப்
போக்கவும் செல்லுவதே கடமையாகும்.]
 

பாங்கி காவல்பிரிவு உடன்படாமை:
 

பண்காவல்கொண்டபணிமொழிச்செங்கைப்பசுங்கிளிக்கும்
கண்காவல் என்பதும் கண்டும்செல் வீர்கொல் கருங்கடல்சூழ்
மண்காவல் கொண்ட மணிநெடு வேல்முடி மன்னவர்க்குப்
பெண்காவல் கொள்கை பெரும்பழி போலும் பெருந்தகையே.

அம்பி. 520

எனவும்,

     [பெருந்தகையே! பண்ணைவென்ற இன்சொல் தலைவிக்கு உன்
கண்களே காவலாகும் என்பதை உணர்ந்தும் செல்வாய்கொல்லோ? கடல்சூழ்
உலகைக் காக்கும் வேலை ஏந்திய முடி மன்னவருக்குப் பெண்ணிற்கு இடர்
வாராமல் காத்துக்கொண்டிருப்பது பெரிய பழிபோலும்!]