696இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

காவல் பிரிவு தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்:


மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யான்அரு ளால்விரி நீர்உலகம்
காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயல்கண்
பூப்பால் நலம்ஒளி ரும்புரி தாழ்குழல் பூங்கொடியே.

திரு. 312

எனவும்,

     [கருங்கயல் புரிகுழல் தலைவியே! யாவரினும் மூத்தானும் இளையானும்
யாருக்கும் முன்னவனும் பின்னவனும் திரிபுரங்களை அழிப்பானும் ஆகிய
தில்லையான் அருளால் உலகத்தைப் பாதுகாக்க நம் தலைவர் பிரியக்
கருதுகின்றார்.]


காவற்குப் பிரிந்துழித் தலைவி கூதிர்ப்பருவம் கண்டு
வருந்தியமை:


நிறைசூல் எழிலி பொழிந்துகண் மாறிய பின்னைநின்ற
குறைசூழ் புறவு குழைபயன் சோரும் குறுந்துளிகொண்டு
அறைசூறைவாடைஅலைக்கும்நன்னாள் இங்கு அறிகிலர்கொல்
நறைசூழ் மலர்க்குழ லாய்நாடு காவல் நயந்தவரே.

அம்பி. 522


எனவும்,

     [மணம் கமழ் மலர்க் குழலாய்! மேகம் மழை பொழிந்து நீ்ங்கிய பின்,
காடுகள் தளிர்ப்பச் சிறுதிவலை கொண்டு வாடைக்காற்று துன்புறுத்தும்
நாளை, நாடுகாவலை விரும்பும் நம் தலைவர் இங்கு அறியார்கொல்?
 

கூதிர்ப்பருவம்கண்டு வருந்திய தலைவியைத்
தோழி ஆற்றுவித்தல்:
 

பணிவார் குழைஎழி லோன்தில்லைச் சிற்றம் பலம்அனைய
மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப்