பணிவார் திறையும்பகைத்தவர்சின்னமும்
கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொடு ஆலிக்கும் மாவொடு அணுகினரே.
திரு. 330
எனவும்,
[பாம்பைக் குழையாக அணிந்த எழிலோன் ஆகிய சிவபெருமானின்
சிற்றம்பலம் அனைய, நீலமணிபோன்ற கூந்தலைஉடைய தலைவியே! நம்
தலைவன், தன்முன் பணிந்தவர் அளித்த கப்பப்பொருளையும் பகைத்தவர் சின்னங்களையும்
கொண்டு, வளவிய தேரில் முரசம்ஒலிக்க, தாவிஓடும்
குதிரையோடு நம் ஊர் வந்தடைந்துவிட்டான் ஆதலின், நீ இனிக்
கவலையை நீத்துப் பொலிக.]
வினைமுற்றி மீண்டமை
பாங்கி தலைவிக்கு உணர்த்தல்:
புங்கம் படவண்டு இமிர்நறுங் கோதைப் புரிகுழலாய்
அங்கம்படர்கொண்டு அழிவதுஎன்னே இனி ஆடினரைப்
பங்கம் படவென்ற பன்மணித் தேர்வெம் பரிகடவிச்
சங்கம் படகம் முழங்கவந் தார்நம் தலைவர்இன்றே.
அம்பி 536
எனவும் வரும். இவை இரண்டும்
வன்பொறைக்கு உரியவாம்.
பிறவும் அன்ன.
[வண்டு ஒலிக்கும் கோதையை அணிந்த சுருண்ட குழலாய்! பகைவரைவென்ற
தேரில் குதிரைகளைக்கட்டிச் செலுத்திச் சங்கம் முதலிய வாத்தியங்கள்
ஒலிக்க நம் தலைவன் இன்றே வந்துவிட்டான். ஆதலின், இனி நீ உன்
உடல் கவலையால் வாடுவது ஏன்?]
தூதிற் பிரிவு
தூதிற்பிரிவு தலைவன்
பாங்கிக்கு அறிவுறுத்தற்குச் செய்யுள்:
மூளா அரும்பழி மூண்டுஇரு வேந்தர்கள் மொய்அமரின்
மாளா வகைசென்று மாற்றுதல் வேண்டி மணிவரைவேய்த்
88 |