| 
       
      தோளாய் பிரிந்து வருநாள் 
      அளவும் சுரும்புஇமிர்பூந் 
      தாள்ஆர் மலர்க்குழ லாள்வருந் தாவகை சாற்றுகவே. 
      
      அம்பி 523 
      
       
      
      எனவும், 
      
       
          
      [மலையில் வளரும் மூங்கில் போன்ற தோளாய்! பழி மூள வேந்தர் 
      இருவர்
      போரில் மாளாதபடி அவர்களைச் சந்து செய்வித்தல் வேண்டி, 
      யான் பிரிந்துமீண்டு வரும் நாள் வரையில், சுரும்பு இமிரும் 
      மலர்க்குழலாளாகிய தலைவி
      வருந்தாதபடி அவளை ஆற்றுவித்துக்கொண்டு 
      இருப்பாயாக.] 
  
      
      பாங்கி பிரிவு உடன்படாமை: 
      
       
      
      
      வேயும் கரும்பும் விரும்பிய தோள்இந்த மெல்லியலும் 
      யாயும் பகைகண்டு இருக்கவைத் தோஎதிர்ந்தா ரைமுனையில் 
      பாயும் புரவிப் படைஇரு வேந்தர் பகைத்தவரைப் 
      போயும் தணித்துப் பொருந்திடு மாறு வருந்துவதே. 
      
      அம்பி. 524 
      
      எனவும், 
      
       
          
      [மூங்கிலும், கரும்பும் போன்ற தோள்களை உடைய தலைவியும் 
      அவள்
      தாயும் ஊரவர் கூறும் பகை மொழிகளைக் கேட்குமாறு 
      இருக்கவைத்தோ,
      பகைவர்மேல் போர்முனையில் பாயும் குதிரைப் படையை 
      உடைய
      பகைவேந்தர் இருவரையும் நீர்போய்ப் பகை தணித்துப் 
      பொருந்துமாறு முயலுவது?] 
  
      
      
      
      தூதிற்பிரிவு தலைவிக்குப் 
      பாங்கி அறிவுறுத்தல்: 
        
      
      
      
      மிகைதணித்தற்குஅரிதாம்இருவேந்தர்வெம்போர்மிடைந்த 
      பகைதணித் தற்குப் படர்தல்உற் றார்நமர் பல்பிறவித் 
      தொகைதணித் தற்குஎன்னை ஆண்டுகொண்டோன்தில்லைச் சூழ்பொழில்முகைதணித் தற்குஅரி தாம்புரி தாழ்தரு 
      மொய்குழலே[வாய் 
      
      திரு 314 
      
       
      
      எனவும்,  |