700இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

      [கார்மேகமும் கடலும் வற்றும் காலத்தும் உலகைக் காத்தற்கு
மேற்கொண்ட தஞ்சைவாணனுடைய பகைவரைப் போல வெகுளும்
படையின் போர்| தணிக்கச் சென்ற தலைவன், உலகு முழுவதும் முன்பனி
பொழிகின்ற இக்காலத்தே, தலைவியின் துயரைப் போக்குதற்கு
வந்துதோன்றிவிட்டான்.]
 

துணைவயின் பிரிவு
துணைவயின் பிரிவு தலைமகனால் உணர்ந்த தோழி
அதற்கு உடன்படாமை:


கன்னல் சிலைமதன் காதும் செருவில் கலங்குகின்ற
இன்னற்கு உதவிசெய் தால்என்ன தாகும் இருஞ்செருவின்
மன்னர்க்கு உதவி செயப்பிரி யும்வரி யும்கழற்கால்
செந்நெல் பழனக் கழனிநல் லூரஎம் சேயிழைக்கே.

அம்பி. 528

எனவும்,

      [போரிலே நண்பராகிய மன்னவர்க்கு உதவிசெய்யப்பிரியும்
கழற்காலினையும், செந்நெல் விளையும் வயல்களையும் உடைய நல் ஊர!
எம்தலைவி கருப்புவில்லோனாகிய மன்மதன் செய்யும் போரில் கலங்கும்
துன்பத்திற்கு நீ உதவிசெய்தால், என்ன குறைவு உனக்கு ஏற்படும்.?]
 

துணைவயின் பிரிவு தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்:
 

போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் நோக்கிசென் றார்நமர் வண்புலியூர்க்
காது குலாயகுழை எழி லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாம்விளை கின்றதுஇன்று ஒன்னார் இடுமதிலே.

திரு 316

எனவும்,

      [அன்பு வெளிப்படுத்தும் மெல்லிய பார்வையுடையாய்! போர்ப்
பூச்சூடிய முடிவேந்தர்தம் போர்முனைமேல் நம் தலைவன்