சென்றுள்ளான். புலியூரிலுள்ள
குழையணிகாதனை வழிபடாதவர் படும்
துன்பம் போல, இன்று பகைவருடைய மதில்களுக்கு எத்தகைய தீங்குகள்
நேரிடுமோ ?]
துணைவயில் பிரிந்துழித் தலைவி பின்பனிப்பருவம்
கண்டு வருந்தியது:
சுற்றின விழ்பனி தூங்கத் துவண்டு துயர்கஎன்று
பெற்றவ ளேஎனைப் பெற்றாள் பெடைசிற கான்ஒடுக்கிப்
புற்றுஇல வாள்அர வன்தில்லைப் புள்ளும்தம் பிள்ளைதழீஇ
மற்றுஇனம் சூழ்ந்து துயிலப் பெறும்இம் மயங்குஇருளே.
திரு. 320
எனவும் வரும்.
[பெடைகளைத் தம் சிறகுகளுக்குள் ஒடுக்கி, புற்றில் இல்லாத
கொல்லுதல்
தொழிலை உடைய பாம்பை அணிந்த சிவபெருமானுடைய
தில்லையிலே
பறவைகளும் தம் குஞ்சுகளைத் தழுவி, இனம் சூழத்
துயில்பெறும் இம்
மயக்கந்தரும் இருளில், ‘சுற்றிலும் பனி பெய்யத் துவண்டு
துயர் உறுவாளாக'
என்று என் தாய் என்னைப் பெற்ற தீவினை உடையேன்
யான்.]
தலைவி பாணனைப் பாசறை விடுத்தல்:
தகைமெலியக் கொங்கை தங்குபைம் பொன்னும்வெஞ் சாயகப்பூந்
தொகைமெலி யப்படும் துன்பமும் சொல்லு தொழுதுஇறைஞ்சாப்
பகைமெலி யத்தங்கு பாசறை மேல்செல்லும் பாணமுல்லை
முகைமெலியப்புனை தொங்கல்எம்கேள் வர்தம் முன்புசென்றே.
அம்பி, 530
எனவும்,
[பாணனே! தொழுது வணங்காத பகைவர் மெலியுமாறு பாசறையில்
இருக்கும்
முல்லைப்பூமாலை அணிந்த என் தலைவன்முன்பு சென்று, என்
அழகு
கெடுமாறு கொங்கை |