702இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

யில் பசலை பூத்திருப்பதனையும், கொடிய மன்மதன் கருப்புவில்லிலிட்டுப் பூ
அம்பு தொடுத்தலால் உடல் மெலியப்படும் துன்பத்தினையும் நீ சென்று
சொல்லுவாயாக.]
 

தலைவன் பாணனை வினாதல்:
 

தேதா எனமுரல் செவ்வழி யாழ்கொண்டு சேரிவிட்டுப்
போதாத பாணர்எப் போதுவந் தீர்புலவு உண்பருந்து
மீதுஆடு பாசறை வாய்வினை யேனுக்கு வேல்நெடுங்கண்
சூதுஆர் வனமுலைத் தோகைஎன் னோநின்று சொல்லியதே.

அம்பி. 531


எனவும்
,

      [தேதா என்று ஒலிக்கும் செவ்வழிப்பண்பாடும் யாழினை
எடுத்துக்கொண்டு உம் சேரியை விட்டு என்றும் நீங்காத பாணராகிய நீர்,
பருந்துகள் வட்டமிடும் எம் பாசறைக்கு எப்போது வந்தீர்?
பகைவினைக்கண் இங்குத் தங்கியிருக்கும் எனக்கு, வேல் போன்ற
நெடுங்கண்களையும் சூதடு கருவி போன்ற அழகிய நகிலினையும் உடைய
தலைவி என்ன செய்தி சொல்லி அனுப்பினாள்?]
 

தலைமகனுக்குப் பாணன் கூறல்:


திருவடி வீழ்ந்துஅடி யேன்திரு வேவிடை என்றுசெப்பப்
பருவரல் எம்பெரு மாட்டி பகர்ந்தது பற்றலரைப்
பொருதுஇகல் வென்ற புனைமணித் தேரும் புரவலரும்
வருவது கண்டிட யாம்பெற் றிலேம்என்னும் வாசகமே
.
 

அம்பி 532

எனவும்வரும். இது சொல்லிய கூற்று எனச் சொல்லியது ஆகலின், பிரிவுழித்
தலைவி கலங்கலின் பாற்படும்.

       [எம்பெருமாட்டியின் திருவடிக்கண் வீழ்ந்து வணங்கி ‘அம்மையே!
விடைகொடுங்கள்' என்று யான் வேண்ட, எம்பெருமாட்டி தன்துயரைக்
குறிப்பிட்டமுறை இதுவே,