‘பகைவரைப் போரிட்டு மாறுபாட்டை
அழித்த நெடுந்தேரும் தலைவரும்
வெற்றியோடு மீண்டு வருதலைக்காணும் வாய்ப்பினை யாம் பெறும்அளவு
அதுகாறும் உயிரோடு இருக்கமாட்டோம்' என்ற சொற்களே அவள்
கூற்றாகும்.]
தலைவன் பாசறைப் புலம்பல்:
சாந்தம் கமழும் தடமுலை
யாள்நின்ற தன்மைஇது
வேந்தன்பகைமுற்றிமீள எண்ணேன்வெயில்போய்ஒளித்துக்
காந்தும் கடுங்கன லும்பொடி போர்க்கும் கடைப்பனிநாள்
போந்தும் கிடந்துவிட் டேன்என்ன பாவம் புகல்வதுவே.
அம்பி 533
எனவரும்.
[சந்தனம் மணக்கும் தடநகிலாள் இருக்கும்நிலை இதுவாம்.
வேந்தனுடைய
பகைவர்கைsள அழித்து விரைவில் மீண்டு வருதலைக்
கருதேனாய், வெயில்
ஒளிப்பக் கனலும் பொடி போர்க்கப் பின்பனிக்காலம்
வந்தும்
பாசறையிலேயே தங்கிவிட்டேன். யான் செய்துள்ள தீவினையை
என்ன
என்று புகல்வேன்?]
தலைவி பிரிந்துழிக் கனவு
கண்டு இரங்கல்:
வனவேய் பொருதடந் தோள்வடந்
தோய்முலை வல்லுப்புல்ல
நனவே எனஉன்னி நாட்டம் துறந்துநன் ஞானம்இல்லார்
எனவே தனிநின்று இரங்கவெங் கானத்து இகலும்கங்குல்
கனவே உனக்கும் கனவுஎய்து மால்ஒரு காலத்திலே.
அம்பி. 551
எனவும் வரும். இவை ஆறும் பிரிவுழிக் கலங்கற்கு உரியவாம்.
[வேய்த்தோள் வனமுலை நல்லாளைக் கனவிடைப் புல்லினேனாக,
நனவாகக்
கண்விழித்து நல்ல ஞானம் இல்லாதவர்களைப் போலக் கலங்கித்
தனியே
நின்று நான் வருந்துமாறு கொடிய காட்டில் எனக்கு மாறுபாட்டைச்
செய்யும்
இராக் |