| 
       
      காலக் கனவே! உனக்கும் ஒரு 
      காலத்தில் கனவு வந்து உன்னைத் 
      துன்புறுத்தும்] 
      
       
      
      
      பின்பனிப் பருவம் கண்டு வருந்திய தலைவியைத் 
      தோழி ஆற்றுவித்தல்: 
      
       
      
      
      வடுக்கண்டனையகண்மங்கை நல்லாய் தஞ்சைவாணன்வெற்[பில் 
      அடுக்கம் குளிர அசைகின்ற வாடை அகன்றவர்க்கு  
      நடுக்கம்செய் பின்பனி நாளின்வந் தார் அமர் நண்பன்உற்ற 
      இடுக்கண் களையஅன் றேஅகன் கானம் இகந்தவரே. 
      
      தஞ்சை. 419 
      
       
      எனவரும். 
       
          
      [வடுவகிர் போன்ற கண்களை உடைய தலைவி! போரில் ஈடுபட்ட 
      நண்பனுடைய துன்பத்தைப் போக்கக் காட்டைக் கடந்து சென்ற நம் 
      தலைவர்
      தஞ்சைவாணன் மலையில் பக்கமலைகள் குளிர அசைகின்ற 
      வாடைக்காற்றுப்
      பிரிந்தவர்களுக்கு நடுக்கம் செய்யும் பின்பனிநாளில் வந்து சேர்ந்தார்.] 
       
            ‘தூதும் துணையும் ஏது வாகச் 
           
      சென்றோன் அவ்வினை நின்று நீட் டித்துழிப் 
           
      புலந்து பாசறைப் புலம்பவும் பெறுமே.' 
      
      இ. வி. பொ. 89 
      
       
      என்ப ஆகலின், வினை ஓர்யாண்டின் முடியாது நீட்டித்தவழி, தலைவன் 
      தலைமகள்உருவுவெளிப்பாடு கண்டு சொல்லியது: 
       
      
      
      மைக்குஞ் சரநிரை யால்தஞ்சை வாணன் மருவலரைக் 
      
     
      கைக்கும் களம்கெழு பாசறை யூடு கயலும்வில்லும் 
      மொய்க்கும் சுடர்இள அம்புலி தானும் முயங்கிஎல்லாத் 
      திக்கும் தொழவரு மேசுருள் ஓலைத் திருமுகமே. 
      
      
        
      
      தஞ்சை. 433 
      
      எனவரும். இது வன்பொறைக்கு 
      உரித்து.  |