[யானைப் படையால் தஞ்சைவாணன்
பகைவரைத் துன்புறுத்தும்
களம்
உடைய பாசறையில், கயலும் வில்லும் இளம்பிறையும் கலந்து எல்லாத்
திசையிலுள்ளாரும் தொழுமாறு வனப்புடைய சுருண்ட ஓலைத் திருமுகம்
உருவெளியாகக் காட்சி வழங்குகின்றது.]
கயல்--கண்; வில்--புருவம்; பிறை--நெற்றி; ஓலை--காதணி;
திருமுகம் --
தலைவியின் அழகிய முகம்.]
வினை முடித்ததன்பின் வியன்பதி சேய்த்து என வினாதல்:
முன்இட்ட வாசி நுகம்பூட்
டலும்முன்பின் ஆக்குதிண்தேர்
பின்இட்ட ஓட்டம் கடிந்துநண் பாபொரும் பேரரசர்
வெந்இட்டவேல்வலவாணன் தென்மாறை செல்வெண்புரிமின்
தன்இட்ட மேசென்ற கார்என்செய் யாது தனிச்சியையே.
[தஞ்சை. தனி]
எனவும்,
[நண்பா! முன்னர்க் குதிரையைத் தேரின் நுகத்தில் பூட்டலும், முன்
செல்லும்
தேர்களை எல்லாம் பின்னிடச் செய்து முன்னே விரையும் நம்
தேரின்
வேகத்தையும் மீறி, போரிட வந்த பேரரசர் முதுகுகாட்டி ஓடுமாறு
செய்த
வேலி்ல் வல்ல வாணனுடைய தென்மாறையினை நோக்கி விரைந்து
சென்ற
மின்னலோடு சென்ற கார் தனியாக இருக்கும் தலைவியை என்ன
பாடுபடுத்தாது? ]
வினைமுற்றி மீண்டவன் உருவு
வெளிப்பாடு
கண்டு கூறியது:
வரிதரு காஞ்சி மணிநெடுந்
தேரும் வயங்கெழுவான்
பரியும் இருங்கண் பகடும்ஐ வாட்படை யும்குவிந்து
89 |