706இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

திரிய முனிந்தது தேர்வல வாஅகல் வார்செருவிட்டு
இரிய முனிந்துஇறை கொண்டுஅகல் காலையில் எத்திக்குமே
.

அம்பி. 534


எனவும் வரும். இவை இரண்டும் வருவழிக் கலங்கற்கு உரியவாம்.

   [தேர்வலவா! பகைவர்கள் போரக்களத்தை விட்டு ஓடுமாறு வெகுண்டு
பாசறைக்கண் தங்கி வென்று மீண்டு வரும் காலத்தில்,
எத்திசையின்கண்ணும் காஞ்சி அணிந்த மணிநெடுந்தேரும் வானை முட்டும்
கருங்கண் யானையும் வியக்கத்தக்க வாட்படையும் திரண்டு என்னைக்
கோபித்தன.

      தேர்--அல்குல்; யானை--நகில்; வாள்--கண்; இவை உருவெளியில்
காணப்பட்டவை. ]


பாசறை முற்றி மீண்டு ஊர்வயின் வந்த தலைமகன்
பாகற்குச் சொல்லல்:


மால்கொண்டவாரணவாணன்தென்மாறைவலவாநண்ணார்
கால்கொண்டவாள்அமர்கைஅகல்பாசறைக்கைவயின்முட்
கோல்கொண்ட வாறும்நின் ஏவல்கொண்டு யான்இக் கொடிநெடுந்தேர்
மேல்கொண்டவாறும்நம்ஊர்வந்தவாறும்வியப்புஎனக்கே.

தஞ்சை. 424


என வரும். இது வந்துழி மகிழ்ச்சி. பிறவும் அன்ன.

      [மதமயக்கம் பொருந்திய யானைப்படைகளை உடையவாணன்
தென்மாறைவலவனே ! பகைவர் முனைந்த வாட்போர் நம்மாட்டு
வெற்றியாக முடிவுற்றதாக, அப்பேராரவாரத்தில், நீ கையில் கோல்
கொண்டதும், உன் ஏவலின்படியான் இக்கொடிநெடுந்தேரில் ஏறியதும், நம்
ஊருக்கு யான் வந்ததும் எனக்கு வியப்பைத் தருவனவாகும்.]