அகத்திணையியல்--நூற்பா எண் 186707

பொருள்வயின் பிரிவு
பொருள்வயின் பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்:


முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்எனப்
பனிவரும் கண்பர மன்திருச் சிற்றம் பலம்அனையாய்
துனிவரும் நீர்மை இதுஎன்என்று தூநீர் தெளித்துஅளிப்ப
நனிவரும் நாள்இது வோ என்று வந்திக்கும் நன்னுதலே.

திரு. 332


எனவும்,

      [சிவபெருமானுடைய சிற்றம்பலம் அனையாய்! ‘முனிவருக்கும்
தேவருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் தான் ஈட்டிய பொருளைக்
கொண்டே நிறைவேற்றுதல் வேண்டும்' என்று யான் கூறிய அளவில்,
கண்ணீர் உகுத்துத் தலைவி வருந்தினாளாக, அவளுக்குப் பனிநீர் தெளித்து
மயக்கம் தெளிவித்து, ‘நீ வருந்துமாறு என்னை?' என்று ஆற்றுவிப்ப,
தலைவி ‘தலைவன் மீண்டு வரும் நாள் இதுவோ?' என்று வணங்கி
நின்றாள்; அத்தகைய நீர்மையாளை நீயே உணர்த்திப் பிரிவாயாக. ]


பொருள்வயின் பிரிவு தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்:


வறியார் இருமை அறியார் எனமன்னும் மாநிதிக்கு
நெறிஆர் அருஞ்சுரம் செல்லலுற் றார்நமர் நீண்டுஇருவர்
அறியா அளவுநின் றோன்தில்லைச் சிற்றம் பலம்அனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே.

திரு.333


எனவும் வரும்.

     [திருமாலும் பிரமனும் தம்முயற்சியால் காண அரியனாய் நின்றோனது
சிற்றம்பலம் அனைய இயற்கைவனப்புடைய கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் திருநுதல் தலைவியே! ‘செல்வம் இல்லாதவர் இம்மை மறுமை
இரண்டனையும் அறி