708இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

யார்' என்று நிலைபெற்ற பெருஞ் செல்வம் தேட, நம் தலைவன் வழி
அறிதற்கு அரிய கொடிய பாலைவனத்தைக் கடக்கச் சென்றுவிட்டான்.]

திருவூ ரகத்துநின் றோர்திருப் பாடகத் துள்இருந்தோர்
மருஊர்பொழில்வெஃகணைக்கிடந்தோர் வண்டு உலாவுமலர்த்
தருஊர் பொழில்தந்தி வெற்பின்மின் னேநம் தனம்முழுதும்
ஒருஊர் கலத்தில்சென் றார்தன மாக உணர்ந்திலரே.


இதுவும்அது.

     [மின்னே! ஏரகத்தில் நின்றும் பாடகத்தில் இருந்தும் வெஃகாவில் கிடந்தும் உலகைப் பாதுகாக்கும் திருமாலுடைய, வண்டுகள் மொய்க்கும் மரங்கள் அடர்ந்த சோலைகளை உடைய தந்தி மலையிலே, நம்மைபிரிந்து ஊர்தியில் சென்ற தலைவர் தம்தனங்களைத் தம் தனமாகக் கருதவில்லையே! ]
 

பாங்கி தலைவிக்கு உடன்படுத்தல்:


இருங்கற்பு உடையவர் இன்புறும் ஆடவர் ஏகுவதும்
அருங்கற்பு உடையவர் ஆற்றும்திறனும் அணிஇழைப்பொன்
மருங்கில் படர்முலை யாய்அவர் மீண்டு வருவதுவும்
கருங்கல் புடைதழு வும்கடல் ஞாலம் கடன்என்றுமே.

அம்பி. 547

எனவரும். இஃது ஏனையவற்றிற்கும் ஒக்கும்.

     [தலைவியே! கல்வி யறிவின்மிக்க மேதக்க ஆடவர் பொருள்தேடப்
பிரிவதும், அவர்தம் கற்புடை மனைவியர் பொறுத்திருக்கும் திறனும், பின்
சென்ற தலைவர் மீண்டு வருவதும், சக்கரவாள கிரியைப் புறஎல்லையாக
அடுத்த கடலைஉடைய உலகத்தின்கண் என்றும் பின்பற்றத் தக்க
கடமைகளாம்.]