பொருள்வயின் பிரிந்துழித்
தலைவி இளவேனில்
பருவம் கண்டு வருந்தியது:
வாழும் படிஒன்று கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை அம்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்று இரு ளாநின்ற கோகிலமே.
திரு. 322
எனவும்,
[கொவ்வைக்கனி போன்ற இதழினையும் யாழ் போன்ற
மொழியினையும்
உடைய பார்வதிபாகனாகிய சிவபெருமானின்
சிற்றம்பலத்தை விரும்பாத,
உணவையே விரும்பி உட்கொள்ளும் மனம்
போல, கரிய நிறத்தை உடைய
குயில்கள் இம் மாம்பொழிலின்கண்
குடைதலால் தேன் துளிகள் நாற்புறமும்
வந்து பற்றின. இவ்விளவேனில்
காலத்திலும் தலைவன் மீண்டு
வாராமையால்,
இனி உயிர் வாழுமாறு
ஒன்றும் கண்டிலேம்.]
இளவேனில் பருவம் கண்டு
வருந்திய தலைவியைத்
தோழி ஆற்றுவித்தல்:
வார்த்தன பார மடமயி லேகுயில் மாருதமாம்
தேர்த்தனி வீரன் திருநாள் இதுவந்து சேர்மின்என்று
தார்த்தட மேரு எனும்புயன் வாணன்தஞ் சாபுரிநின்று
ஆர்த்தது கேட்டுவந் தார்பொருள் தேட அகன்றவரே.
தஞ்சை. 422
எனவும்,
[மயிலே! மேருமலைபோன்ற மாலை அணியும் புயங்களை உடைய
வாணனுடைய தஞ்சாபுரியிலிருந்து, ‘குயில் தென்றலாகிய ஒப்பற்ற தேரை
உடைய வீரனாகிய மன்மதன் திருநாள் இது. பிரிந்தவர் வந்து சேருங்கள்'
என்று அவன் காகளமாக ஊதி ஆரவாரித்ததனைக் கேட்டுப் பொருள்
தேடச் சென்ற நம் தலைவன் மீண்டு வந்துவிட்டான்.] |