710இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

தலைவிக்குத் தோழி நிமித்தம் கூறல்:

 

அரவுஇசைக் கும்திரு அல்குல்நல் லாய்அடை யார்மடியப்
பொரஇசைக் கும்பரி பூண்டுபொற் றேர்நம் புரவலர்தாம்
வரஇசைக் கும்பல்லி வாமம் துடிக்கும் வரிநெடுங்கண்
இரவுஇசைக் கும்குழ லோடுஇள வாடை இன்று என்செயுமே.


அம்பி. 535

எனவும்,

      [அரவு அல்குலாய்! பகைவர் அழியப் போரிட ஒலிக்கும் குதிரை
பூட்டப்பட்டுப் பொற்றேரைச் செலுத்தி நம் தலைவன் வருவான் என்பதை
இசைக்கும் பல்லியின் சொகினத்தையும், கண்கள் இடந்துடிக்கும்
நன்னிமித்தத்தையும் காண்பாயாக. இனி, இரவில் ஒலிக்கும் குழல் ஓசையும்
வீசும் வாடைக்காற்றும் நம்மைத் துன்புறத்துதல் இயலாது.]


தலைவன் வரவு உணர்த்தல்:
 

குரவுஅலர் பூங்குழ லார்நெடு வீதி குறுகிவண்டு
வீரவுஅலர் தூவி மிகமிக வாழ்த்த வியந்துமுன்நின்று
இரவலர் ஏத்த இனவளை ஆர்ப்ப இயம்முழங்கப்
புரவலர் இன்றுவந் தார்திரு வேதம் பொருள்முடித்தே.

அம்பி. 556


எனவும்
,

      [திருவே! குராமலர் மணம் கமழும் மகளிர் தம் பெருவீதியிலே
பறந்துசென்று வண்டு அலர்தூவி வாழ்த்த, இரவலர்கள் முன்நின்று புகழ,
சங்குகள் ஆர்ப்ப, வாத்தியங்கள் முழங்கத் தலைவன் இன்று பொருள்
தேடும் தன்தொழிலை முடித்துக்கொண்டு நம் வீடு வந்து சேர்ந்துவிட்டான்.]
 

தலைவனைப் பாகன் தேற்றல்:


திண்காட்டு இருஞ்சுரம் சேய்த்துஎன வேநின் திருவுளத்துப்
புண்காட்ட நைந்து புலம்பாது ஒழிபொறை காட்டுகின்ற