மண்காட்டுதிண்புயத்தான்வாணன்மாறையின்
மன்னவநின்
கண்காட்டும் முன்னம் கடிதினின் வாழ்பதி காட்டுவனே.
தஞ்சை. 341
எனவும் வரும். இவை நான்கும் வன்புறைக்கு உரியவாம்.
[உலகைத் தாங்கும் திண்ணிய புயத்து வாணனது மாறையின்
மன்னவனே!
‘திண்ணிய காட்டுவழி அமைந்த இப் பாலைநிலம் ஊரிலிருந்து
சேய்மைக்கண் உள்ளதே' என்று உன் மனத்தில், புண்பட்டு வருந்திப்
புலம்பாதே. நீ கண்ணால் ‘புறப்படு' என்று குறிப்பிட்ட உடனே, மிக
விரைவில் நீ வாழும் ஊருக்கு உன்னைக் கொண்டுசென்று விடுவேன்.]
பொருள்வயின் பிரிந்து
மீண்ட தலைவன் சுரத்திடைத்
தலைவியை நினைத்தல்:
சேணும் திகழ்மதில் சிற்றம் பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்சு
ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின்எல்லாம்
காணும் திசைதொறும் கார்க்கய லும்செங் கனியொடுபைம்
பூணும்புணர்முலையும்கொண்டுதோன்றும்ஒருபூங்கொடியே.
திரு. 341
எனவரும். இது வருவழிக் கலங்கற்கு
உரித்து.
[வானளாவிய மதில்களை உடைய சிற்றம்பலத்தானாய், கடல்நஞ்சை
அமுதமாகக் கொண்ட சிவபெருமானுடைய உலகம் முழுதும், உருவெளியாக,
ஒரு பூங்கொடி, காணும் திசைகள் தோறும், கரியகயல்மீனும் செங்கனியும்
பசிய அணிகளும் புணர்முலையும்
கொண்டு காட்சி வழங்குகிறது.]
தலைமகன் வந்துழித் தலைவி
மகிழ்ச்சி:
பரியும் கரியும் பரிநெடுந்
தேரும் படைநவின்று
விரியும் கடல்அன்ன தானையும் வேந்தும்வெம் போர்கடந்து
|