வரியும் கழல்முடி மன்னர்நின்று
ஏத்த வரும்பரிசும்
தெரியும் தெரியிழை யீர்காண வாரும்இச் சேண்நிலத்தே.
அம்பி. 537
எனவும்,
[பரி, கரி, தேர், ஆள் என்ற நால்வகைப் படையோடு கூடிய
பகைமன்னரைப்
போரில் வென்று அழித்து, கழலை அணிந்த
முடிமன்னர்களும் நின்று
புகழுமாறு, நம் தலைவன் வரும் அழகைக்
காண்பதற்கு மங்கைமார்
எல்லோரும் இப்பரந்த இடத்திற்கு வாருங்கள்! ]
தலைமகளோடு இருந்த தலைவன்
கார்ப்பருவம் கண்டு
உவந்து சொல்லியது:
கொத்தலர்ஓதி அம்கொம்பர்
அன்னாள்பொங்குகொங்கைவிம்ம
முத்துஅலர் ஆகம் முயங்கினம் யாம்முழு நீர்விழிபோல்
மைத்து அலர் நீல மலர்வயல் சூழ்தஞ்சை வாணன்வண்மைக்
கைத்தலம் மான இனிப்பொழி வாழிய கார்ப்புயலே
தஞ்சை 425
எனவும் வரும். பிறவும் அன்ன.
186
[கார்மேகமே! கொத்தாகப் பூக்கள் மலரும் மயிர் முடியை உடைய
அழகிய கொடிபோன்ற தலைவியின் கொங்கைகள் விம்ம, முத்துப்போல
வியர்வை
துளிக்க, அவள் மார்பத்தை யான் தழுவிக்கொண்டுள்ளேன்.
மகளிர்
விழிபோல நீலம் மலரும் வயல்களை உடைய தஞ்சைவாணனுடைய
கொடைத் தொழிலைஉடைய கைகளைப்போல இனி நீ பெயல் பொழிந்து
வாழ்வாயாக!]
186 |