‘ஒழிபுஎனப் படுவது அகப்பாட்டு
உறுப்பும்
வழுவும் அமைதியும் தழுவியது ஆகும்.'
ந. அ. 210
என இப்பன்னிரண்டையும் அகப்பாட்டு உறுப்பாகநோக்கி அகத்திணை
ஒழிபு
ஆக்கின் அது பொருந்தாது; செய்யுள் உறுப்பாக நோக்கிய வழி,
அவை
செய்யுள் இலக்கணம் ஆவது அல்லது, அகத்திணை ஒழிபு
ஆகாமையின்.
187
விளக்கம்
அகப்பொருள் செய்யுளகத்து வரும் என்பது இரண்டாம் நூற்பாவில்
சுட்டப்பட்டுள்ளது. ஆயின்
அது பன்னிரு பகுதிப்பட்டுப் பாட்டுக்கு
உறுப்பாய் வரும் என்பது இங்கே கூறப்படுகிறது. நம்பிஅகப்பொருள் நூலார்
திணை முதலிய பன்னிரண்டனையும் அகப்பாட்டு உறுப்பு என்றார்,
செய்யுளுக்கு உறுப்பு என்று கொள்வதாயின் செய்யுளியலிலேயே கூறல்
வேண்டும்; ஈண்டுக் கூறுவது பொருந்தாது. திணை முதலியவற்றைச் செய்யுள்
உறுப்பாகக் கொண்ட தொல்காப்பியனார்
செய்யுளியல் முதல் நூற்பாவில்
அவற்றைக் குறிப்பிட்டுள்ளமை காண்க.
ஒத்த நூற்பா
‘ஒழிபு .... .... .... .... ஆகும்.'
ந. அ. 210
187
அகப்பாட்டு
உறுப்புக்கள்
560 திணையே கைகோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் பயனே முன்னம்
மெய்ப்பாடு எச்சம் பொருள்வகை துறைஎன
அப்பால் ஆகும்அவ் வாறிரு வகையே.
இது, மேல் ‘ஆறிரு வகை' என்றார், அவை இவை என்கின்றது. |