(இ-ள்) திணை முதலாகத் துறை ஈறாகக் கிடந்த அப்பகுதிகளாம், மேற்கூறிய பன்னிருவகை என்றவாறு.
186
ஒத்த நூற்பாக்கள்
திணையே .... .... .... .... துறைஎன்று அப்பால் ஆறிரண்டு அகப்பாட்டு உறுப்பே.'
ந. அ, 211
‘திணையே கைகோள் கூற்றுவகை எனாஅப்
இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு
பயனே கோள்என்று ஆங்கப் பத்தே
அகன்ஐந் திணையும் உரைத்தல் ஆறே.'
இறை. அக. 56
‘திணையே கைகோள் கூற்றே கேட்போர்
கேட்போர் இடனே காலவகை எனாஅப்
பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ
முன்னம் பொருளே துறைவகை எனாஅ
.... .... .... .... .... .... .... .... .... ....
வல்லிதின் கூறி வகுத்துரைத் தனரே.'
தொல். பொ. 313
188
திணையும் கைகோளும்
561 முன்னவை இரண்டும் சொன்னவை யாய்அவற்று
ஒன்றுஅவண் வருதல் ஒன்றித் தோன்றும்.
இது, நிறுத்தமுறையானே எழுவாய் எண்ணும்முறைமைக்கண் நின்ற
திணையும், இரண்டாம் எண்ணும் முறைமைக்கண் நின்ற கைகோளும்
இவ்வியல்பினவாய்ச் செய்யுட்கு உறுப்பாய் வரும் என்பதோர் ஒழிபு
கூறுகின்றது.
(இ-ள்) முதற்கண் நின்ற திணையும் கைகோளும் மேற்கூறிய
இலக்கணத்தனவாகிக் கைக்கிளை முதலிய ஏழுதிணையுள் ஆண்டைக்கு
இயைபுடைய யாதானும் ஒரு திணை செய். |