பார்ப்பான் நன்றும் தீதும்
ஆராய்ந்து உறுதி கூறும் உயர்குலத்
தோழன்.
பாங்கன் பெரும்பாலும் தலைவன்வழி நின்று ஒழுகும் ஒத்த
குலத்தோனாகிய
தோழனும் இழிகுலத்தோனாகிய தோழனுமாம். ‘கலந்து
ஒழுகும் மரபு'
என்றதனால், பார்ப்பாரினும் பாங்கரினும் சிலரே அதற்கு
உடன்படுவர்
எனவும், ‘தொன்னெறி மரபின் கிளவி' என்றதனால், அவர்
குலந்தோறும்
கிளந்து வருகின்ற நெறியை உடையர் எனவும் கொள்க.
‘பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனன் என்றனள்'
குறுந். 84
இது செவிலி கூற்று.
‘பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனிபசந் தனள்என வினவுதி'
அகநா. 48
என்பதும் அது,
‘கேளிர் வாழி கேளிர்'
குறுந். 280
இது கிழவன் கூற்று.
‘விளங்குதொடி முன்கை வளைந்துபுறம் சுற்றி
நின்மார்பு அடைதலின் இனிதா கின்றே.'
அகநா. 58
இது கிழத்தி கூற்று.
‘ஆடலில் பயின்றனை என்னாது என்னுரை
ஊடலில் தெளிதல் வேண்டும்.'
தொல். பொ. 502 எடு.
இது கூத்தன் கூற்று.
பிறவும் அன்ன.
190
விளக்கம்
இந்நூற்பா தொல்காப்பியப் பொருட்படலச் செய்யுளியல் நூற்பாக்கள்
இரண்டனைச் சேர்த்து அமைக்கப்பட்டதாகும். இதன் உரைவிளக்கம்
உரையாசிரியர் சொற்றதாம். |