ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
தொ. பொ. 501, 502. பே.
‘தலைவன் தலைவி பார்ப்பான் பாங்கன்
பாங்கி செவிலிஎன்று ஈங்குஇவ் வறுவரும்
சாற்றிய களவின் கூற்றிற்கு உரியர்.’
ந. அ. 213
‘நற்றாய் கண்டோர் பாணன் கூத்தர்
விறலி பரத்தை அறிவர்என்று எழுவரும்
அறுவர் என்றவரும் ஆகிய அனைவரும்
குறைவுஅறு கற்பின் கூற்றிற்கு உரியர்.’
ந. அ. 214
190
முகத்துரை நிகழ்த்தாதார்
563 ஊரும் அயலும் சேரி யோரும்
நோய்மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும்
கொண்டெடுத்து மொழியப் படுவது அல்லது
கூற்றுஅவண் இன்மை யாப்புறத் தோன்றும்.
இஃது எய்தாதது எய்துவிப்பதோர் ஒழிபு கூறுகின்றது.
(இ-ள்) ஊரில் உள்ளாரும் அயல்மனை உள்ளாரும் சேரியின்
உள்ளாரும்
நோய்ப்பக்கம் குறிப்பினால் அறிந்தோரும் தந்தையும்
தமையனும் என
இவ்வெண்ணப்பட்ட அறுவகையோரும் இருவகைக்
கைகோளும் பற்றிச் செய்யுளகத்துக் கூற்று நிகழ்த்துங்கால்,
அந் நிகழ்ச்சி
கொண்டெடுத்து
மொழியப்படுவது அல்லது முகத்துரையாக நிகழ்த்தும்
நிகழ்ச்சி ஆண்டு
இல்லாமை வலியுறத் தோன்றும் என்றவாறு.
கொண்டெடுத்து மொழிதல் - இவர் கூற்றாகப் பிறர்கூறுதல்.
91
|