722இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

      ‘ஊஉர் அலரெழச் சேரி கல்லென’

குறுந். 262


எனவும்,
       எந்தையும்,
      நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப
      எவனில குறுமகள் இயங்குதி என்னும்.

அகநா. 12

எனவும் வரும்.

     ‘யாப்புறத் தோன்றும்’ என்பதனான், அகத்திணைக் கண் அவ்வாறு
நிகழும் எனவும், புறத்திணைக்கண் அவர் கூறவும்பெறும் எனவும் கொள்க.

191

விளக்கம்


     இச்செய்தி களவு கற்பு என்ற இருவகைக் கைகோளுக்கும்
பொதுவாகும். இவர் புறத்திணைக்கண் கூறவும் பெறுவர் என்பது
நோக்கிப்போலும் நேர்முகக் கூற்றுக்கு உரியர் அல்லாதாரையும் நூற்பாவில்
குறிப்பிட்டுள்ளார். ‘நோய் மருங்கு அறிநரை இடைவைத்தார், முன்னைய
மூன்றும் பெண்பால் எனவும், ஒழிந்தன ஆண்பால் எனவும் அறிவித்தற்கு.
எனவே நோய் மருங்கு அறிநர் ஆண்பாலும் பெண்பாலும் ஆயினார்.’

தொல். பொ. 503. பே.


 

‘ஊஉர் அலரெழ’-

     உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்திய
இப்பாடலில், ஊரவர் அலர்தூற்றுவதனையும் சேரியிலுள்ளார் கல் என்று
அலர் கூறுவதனையும் தோழி தலைவியிடம் கொண்டெடுத்து மொழிந்தது
காண்க.

‘எந்தையும் நிலனுற’-

    களவின்கண் வந்து ஒழுகும் தலைமகனைத் தோழி குறிமறுத்து வரைவு

கடாய ‘யாயே கண்ணினும்’ என்ற அகப்பாட்டில், தலைவி வீட்டை விட்டு
வெளியே நடந்து வரு