588இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

நன்மை தீமை அச்சம் சார்தல்என்று
முன்னிய காலம் மூன்றுஉடன் விளக்கித்
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ்வழி உரிய.'

தொல். பொ. 36

முழுதும்--                    ந.அ. 184, 185, 186, 187, 188, 189


‘உரன்பயில் பாங்கியொடு உசாய்உணர் பின்னர்
இரங்கல் என்போர்க்கு எதிர்அழிந்து மொழிதலும்
தனாஅது அறிவின்மை தனைநொந்து உரைத்தலும்
பொலந்தொடிச் செவிலி புலம்பற்கு உரிய.'

மா. அ. 84


‘அறன்அறி செவிலி அறத்தொடு நின்றபின்
சேடி தன்னொடும் சேடியர் தம்மொடும்
அயலார் தம்மொடும் பயில்இடம் தன்னொடும்
புரிகுழல் நற்றாய் புலம்பற்கு உரியள்.'

மா. அ. 85


‘புரந்த நிமித்தம் போற்றலும் சுடரொடு
இரந்துகொண்டு ஏத்தலும் இரும்பரல் பரந்த
சுரந்தணி வித்தலும் துடியிடை மென்மைத்
தன்மையும் இளமையும் தணத்தல்இல் அச்சமும்
முன்னி இரங்கலொடு ஒருவகை ஆறும்
மன்னிய நற்றாய் மருட்சிக்கு உரிய.'

மா. அ. 86


‘ஒண்தொடி தாயுடன் உழையர் இரங்கக்
கண்டோர் இரங்குதல் கண்டோர் இரக்கம்.'

மா. அ. 87


‘நற்றாய் தன்னைத் தேற்றலும் கற்றுஅறி
முக்கோல் பகவரை முன்னி வினாதலும்
தக்கோர் ஏதுச் சால்புறச் சாற்றலும்
எயிற்றியைக் கடத்திடை எதிர்ந்து புலம்பலும்
ஒள்ளிய குரவினை எள்ளுபு புலம்பலும்
கள்ளிய புறவுடன் உள்ளி உசாவலும்
சுவடுகண்டு இரங்கலும் தோய்ந்துஉடன் வருவோர்க