அகத்திணையியல்--நூற்பா எண் 191,192723

தலைப் பொறாத தந்தை அவளை நோக்கி ‘உன் சீறடி சிவப்ப எங்குச்
செல்கின்றாய்? என்று வினவினானாகத் தோழி தலைவனிடம்
கொண்டெடுத்து மொழிந்தது காண்க.

     புறத்தின்கண் ஊரவர் முதலியோர் நேர்முகமாகப் பேசுதல்
மணிமேகலை ஊர் அலர் உரைத்த காதை, பெருங்கதை இலாவாண
காண்டக் கடிக்கம்பலை முதலியவற்றில் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்-                            
தொல். பொ. 503


     ‘பயந்தோன் தன்னை உயங்குநோய் அறிவோர்
     ஊரவர் அயலோர் சேரியோர் என்றிவர்
     முகத்துரை நிகழா அகப்பொருள் அகத்தே.’

ந. அ. 215

191
 

நற்றாய் கூற்றின் திறம்
 

564  கிழவோன் தன்னொடும் கிழத்தி தன்னொடும்
     நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது.

     இது நற்றாய் கூற்றிற்கு உரிய மரபு விலக்கியல் வகையான்
விதிப்பதாயதோர் ஒழிபு கூறுகின்றது.

    (இ-ள்) தலைவனோடும் தலைவியோடும் இடையிட்டு நற்றாய் கூறுதல்
நிரம்பத் தோன்றாது என்றவாறு.

     ‘நற்றாய்’ என்று ஒருமை கூறிய அதனால், தலைமகள் தாயே
கொள்ளப்படும். இதனானே, தந்தை தன்னை என்பன போல்வனவற்றுக்கும்
இஃது ஒக்கும். ‘முற்ற’ என்றதனால், தானே தலைவன் ஆதலால்
தலைவன்தமர் யாவரும் கூறார், முற்கூறப்பட்டார் அல்லார் என்பதூஉம்
கொள்க. முற்றாது என்னாது ‘தோன்றாது’ என்றதனால், புறத்திணைக்கண்
இவைவரைவின்றி வழக்கினொடு பொருந்துமாற்றான் கொள்ளப்