724இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

படும் என்பது. கிழவோன்தன்னொடும் கிழத்திதன்னொடும் கூறாள் எனவே,
அல்லுழிச் சொல்லப்பெறும் நற்றாய் என்பதாம்,

அஃது,

    எம்வெம் காமம் இயைவது ஆயின்
    மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர்
    கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த
    பாகல் ஆர்கை பறைக்கண் பீலித்
    தோகைக் காவின் துளூநாட் டன்ன
    வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
    செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
    அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல
    தோழி மாரும் யானும் புலம்பச்
    சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
    பாழி அன்ன கடியுடை வியல்நகர்
    செறிந்த காப்புஇகந்து அவனொடு போகி
    அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
    துய்த்த வாய துகள்நிலம் பரப்பக்
    கொன்றை அஞ்சினைக் குழற்பழம் கொழுதிய
    வன்கை எண்கின் வயநிரை பரக்கும்
    இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராஅங்குக்
    குன்ற வேயின் திரண்ட என்
    மென்தோள் அஞ்ஞை சென்ற வாறே.

அக நா. 15

எனவரும்.

192

விளக்கம்


    இது தொல்காப்பியப் பொருட்பட 504 ஆம் நூற்பா. இதன் உரை
அந்நூற்பாவிற்குப் பேராசிரியர் உரைத்த உரையே, எடுத்துக்காட்டும்
அதுவே.

    தந்தை தன்னையர் என்று பொதுவாகக் கூறினும், ஒப்பற்றவனாகிய
தலைவனுடைய திறத்து அவன் தந்தையோ