726இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

ஒத்த நூற்பாக்கள்


      முழுதும்--                     
தொல். பொ. 504. பே
 


     ‘தலைவன் தலைவியொடு நற்றாய் கூறாள்.’        ந. அ. 218

192

 

நற்றாய், செவிலி கூற்று நிகழ்த்தும் திறம்


565  புணர்ந்துஉடன் போயது உணர்ந்த பின்றை
    அந்தணர் தெய்வம் அயலோர் அறிஞர்
    சிந்தைநோய் அறிவோர் செவிலி பாங்கியொடு
    கண்டோர்க்கு உரைத்தல் பண்புடைத் தாய்க்கும்
    தாயொடு பாங்கி தாம்முத லாரோடு
    ஆயிடை உரைத்தல் சேயிழைச் செவிலிக்கும்
    உரிய என்மனார் உணர்ந்திசி னோரே.


     இது நற்றாயும் செவிலித்தாயும் கூற்று நிகழ்த்துங்கால், அக்கூற்று
அவர்க்கு இன்னாரோடு இன்னுழி ஆம் என்பதோர் ஒழிபு கூறுகின்றது.

    (இ-ள்) தலைவன் புணர்ந்து உடன்போயவாறு தான் அறிந்தபின்னர்
அந்தணர் முதலாகிய அனைவர்க்கும் கூறுதல் நற்றாய்க்கும், அங்ஙனம்
புணர்ந்து உடன்போயவாறு தான் அறிந்தபின்னர் நற்றாய் முதலிய
அனைவரோடும் கூறுதல் தலைமகள் செவிலித்தாய்க்கும் உரிய என்று
கூறுவர் அறிந்தோர் என்றவாறு.
 

ஒத்த நூற்பாக்கள்
 

   முழுதும்-                                 ந. அ. 219,220


193

கண்டோர் கூற்று


566 தாயர் பாங்கியர் தலைவன் தலைவியோடு
    ஏயும் என்ப கண்டோர் கூற்றே.

     இது கண்டோர் கூற்று நிகழ்த்துங்கால் அக்கூற்று இனையரோடு
நிகழ்த்துவர் என்பதோர் ஒழிபு கூறுகின்றது.