(இ-ள்) நற்றாயும் செவிலித்தாயும்
அவள் மகளாகிய உயி்ாப்பாங்கியும்
ஏனைப்
பாங்கியரும் தலைவனும் தலைவியும் ஆகிய இவரோடு கண்டோர்
கூறுதல்
பொருந்தும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
தாயர் பாங்கியர் என்றாற்போல உய்த்து உணரக் கூறாது, தலைவன்
தலைவி
எனச் செவ்வனம் தோன்றக் கூறிய அதனால், அவ்விருவர்
கூட்டத்துமன்றி
அவர் தனித்துழிக் கண்டோர் கூற்று இல்லை எனக்கொள்க.
194
விளக்கம்
உயர்ந்த ஆடவர் பிறர்மகளிரோடும் உயர்ந்த மகளிர் கணவர்
அல்லாத
ஆடவர் பிறரோடும் கூற்று நிகழ்த்தார் ஆதலின், தலைவனும்
தலைவியும்
சேர்ந்து இருப்புழி ஆடவர் தலைவனிடமும் மகளிர்
தலைவியிடமும் கூற்று
நிகழ்த்துவர் என்பதைத் தலைவன் தலைவி என்று
புணர்த்துக்கூறி
விளக்கினார். இது பேராசிரியர் குறிப்பிட்டது.
தொல். பொ. 505
ஒத்த நூற்பாக்கள்
‘ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு
கண்டோர் மொழிதல் கண்டது என்ப.’
தொல். பொ. 505
முழுதும்-- ந. அ. 221
194
கிழவோன் ஆணை கூறல்
567 தமர்வரின் இடைச்சுரம் தன்னில் கிழத்தியோடு
அமர்தரு கிழவோன் ஆணையும் கூறும்.
இதுவும் கூற்றுவிகற்பம் கூறுவதோர் ஒழிபு கூறுகின்றது. |