(இ-ள்) புணர்ந்து உடன்போகின்ற
காலத்துத் தமர்பின் தொடர்ந்து
வருவராயின், அவர் கேட்பச் சுரத்தின்கண் தலைமகளோடு இன்புற்றுச்
செல்லும் தலைவன் அவளோடு ஆணையும் கூறும் என்றவாறு.
ஆணை ஆக்கினை என்னும் வடமொழித் திரிபு. மெல்லிய காமம்
நிகழுமிடத்து ஆணை கூறுதல் மரபு அன்று ஆயினும், கூறாக்கால்
இராக்கதம் போன்று காட்டுதலின், நீதி நூல் வழக்கால் அவ்விடத்துக் கூற
வேண்டுதலின், ‘ஆணையும் கூறும் என்றார்;
‘இடைச்சுர மருங்கின் கிழவன் கிழத்தியொடு
வழங்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன்.’
கதால். பொ. 506
என்ப ஆகலின். ஏற்புழிக் கோடலான் தமர் தலைமகள்தமர் எனவே
கொள்க.
வரலாறு:
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இருபுறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.
நற். 362
எனவரும்.
உம்மையால், கிழத்தியொடு மருட்டிக் கூறவும்பெறும் என்றவாறு.
‘அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிவடு தெய்வம் கண்கண் டாஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழநின்
நலம்மென் பணைத்தோள் எய்தினம் ஆயின்
பொறிப்பூம் புன்கின் எழில்தகை ஒண்முறி |