விட்டேன் ஆதலின், புன்கந்தளிர்களை
நின் வனநகிலில் வீற்றுத்தெய்வம்
மகிழுமாறு சூடி, நிழலைக் காணும்தோறும் நெடுநேரம் ஓய்வு
எடுத்துக்கொண்டு, மணலைக் காணும் தோறும் விளையாட்டயர்ந்து,
மாம்பூக்களைக் கொழுதி மகிழ்ச்சியால் குயில் கூவும் நறிய தண்ணிய
பொழில்களை உடைய காட்டுவழியே யாம் உடன்போக்கு நிகழ்த்துங்காலை
உள்ள ஊர்களில் வருத்தம் எதுவும் இன்றி என்னைத் தொடர்ந்து
வருவாயாக.
‘தலைவிதமரைக் கொல்லேன்’ என்று தலைவன் கூறாக்கால்,
அது தலைவியை வலியக் கவர்ந்து தமரைக் கொன்று பெயரும் இராக்கதம்
போல் ஆகிவிடும் ஆதலின், தலைவன் ஆணை கூறும் இன்றியமையாமை
ஏற்பட்டது என அகத்திணை பற்றிய வழு அமைக்கப்பட்டது.
[தொல்.பொ.506பே]
தலைவிதமர் தொடராதவழி, தலைவியைச் செலவுபற்றி வருந்தாதவாறு
தலைவன் மகிழ்வித்துக் கொண்டே செல்வான் என்பது.
ஒத்த நூற்பாக்கள்
‘இடைச்சுரம் .... .... .... .... உரியன்.’
தொல். பொ. 506
முழுதும்-
ந. அ. 216
195
தலைவி கூற்று நிகழும் இடம்
568 உடன்போய் மீண்ட கொடுங்குழை அரிவை
பிரிவுழித் தலைவனொடு சுரத்துஇயல்பு பேசலும்
பிரிந்துழி நெஞ்சொடும் பிறரொடும் வருந்திச்
சொல்லலும் உரியள் சொல்லுங் காலே
இதுவும் அது.
(இ-ள்) தலைவனுடன் போய் மீண்ட தலைவி, தலைவன் பிரிவுழி
அவனோடு
சுரத்தின் தன்மை கூறலும், பிரிந்தவிடத்துத் தன் நெஞ்சோடும்
பிறரோடும்
வருத்தமுற்றுச் சொல்லுதலும் உரியளாம் சொல்லுமிடத்து
என்றவாறு. |