தலைவன் பிரியுங் காலத்து
அவனோடு சுரத்து இயல்பு
கூறற்குச் செய்யுள்:
நினைக்கினும் அரிதுஅரோ ஐய அன்றுநாம்
பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த
பொருந்தாப் புகர்நிழல் இருந்தனம் ஆக
நடுக்கம் செய்யா நண்ணுவழித் தோன்றி
ஒடித்து மிசைக்கொள் .... .... சுரனே.
நற். 318
எனவரும். இக் கூற்றுப் பகுதிக்கண் காட்டாது ஒழிந்தனவற்றிற்கு உதாரணம்
மேல்காட்டியவற்றுள்ளும்
பிறவற்றுள்ளும் காண்க.
196
விளக்கம்
தலைவன் கற்புக்காலத்தில் ஓதல், பொருள் முதலிய கருதிப்
பிரியுமிடத்து,
தலைவி தான் உடன்போய காலைக்கண்ட சுரத்து
இயல்புபற்றித்
தலைவனிடம் கூறி அத்தகைய கடும்பாலைச் செலவு தவிர்க்க
முயலுதல் உண்டு.
‘நினைக்கினும் அரிது’-
ஐய! யாம் உடன்போக்கு நிகழ்த்தியகாலை, பருத்த அடிமரத்தை
உடைய
ஓமை மரக்கிளையின் புள்ளிபுள்ளியாக அமைந்த நிழற்கண் சிறிது
தங்கி
இளைப்பாறி இருந்தேமாக, நமக்கு நடுக்கத்தை உண்டாக்கி நாம்
இருந்த
வழிக்கண் வந்து, அம்மரம் தளருமாறு வளைத்து ஒடித்துத்
தலைமீது
வைத்துக்கொண்ட நீண்ட கொம்புகளை உடைய யானை தன்
துதிக்கையைச்
சுருக்கிக்கொண்டு ஏதோ அறிவுறுத்தும் குரலோடு
பிளிறியதாக,
அவ்வொலிக்குறிப்பை அறிந்து வெப்பம் மிக்க பிளப்பிடத்தில்
எதிர் ஒலி
உண்டாகுமாறு சிவந்த தலையை உடைய மெல்லிய பெண்யானை
தனிப்படரோடு ஒலித்த குரல் இன்று நினைத்தாலும் நடுக்கம் நீங்குதல்
அரிதாயுள்ளது. |