இப்பாடலில் சிலஅடிகள்
விடுபட்டுள்ளன. பாடலைப் பின்வருமாறு
கொள்ளல் வேண்டும்.
நினைக்கினும் அரிதுஅரோ ஐய அன்றுநாம்
பணைத்தாள் ஓமைப் படுசினை பயந்த
பொருந்தாப் புகர்நிழல் இருந்தனம் ஆக
நடுக்கம் செய்யா நண்ணுவழித் தோன்றி
படுமரம் ஒசிய ஒற்றிய
பின்னர்
ஒடித்துமிசைக் கொண்ட ஓங்குமருப்பு யானை
பொறிகிளர் தடக்கை சுருக்கிப் பிறிதோர்
அறியிடை யிட்ட அளவைக்கு வேறுணர்ந்து
என்றூழ் விடரகம் சிலம்பப்
புன்தலை மடப்பிடி புலம்பிய
குரலே. நற். 318
ஒத்த நூற்பா
முழுதும்-
ந. அ. 217
196
கூற்றிற்குப் புறனடை
569 சாற்றா அனைவரும் தலைவன் தலைவியோடு
ஏற்றன கூறுப இடம்தொறும் இடம்தொறும்.
இதுமேல் விதந்து ஓதப்படாதார்க்கு உரியமரபு உணர்த்துகின்றது.
(இ-ள்) மேல் விதந்து ஓதப்படாத பார்ப்பானும் பாங்கனும் பாங்கியும்
பாணனும் கூத்தனும் விறலியும் பரத்தையும் அறிவரும் ஆகிய அனைவரும்
தலைவனோடும் தலைவியோடும் இடந்தொறும் இடந்தொறும்
பொருந்துவனவற்றைக் கூறுவர் என்றவாறு.
197
ஒத்த நூற்பாக்கள்
‘ஒழிந்தோர் கிளவி கிழவன்
கிழத்தியொடு
மொழிந்தாங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே.’
தொல். பொ. 507 |