734இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

    ‘சாற்றா எழுவரும் தலைவன் தலைவியொடு
    ஏற்றன கூறுப இடந்தொறும் இடந்தொறும்.’

ந. அ. 222
197


தலைவன் தலைவியர் கூற்று வழுவமைதி



570   நோயும் இன்பமும் இருவகை நிலையின்
      காமம் கண்ணிய மரபுஇடை தெரிய
      எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய
      உறுப்புஉடை யதுபோல் உணர்வுஉடை யதுபோல்
      மறுத்துஉரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்
      சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச்
      செய்யா மரபின் தொழில்படுத்து அடக்கியும்
      அவர்அவர் உறுபிணி தமபோல் சேர்த்தியும்
      அறிவும் புறனும் வேறுபட நிறீஇ
      இருபெயர் மூன்றும் உரிய ஆக
      உவம வாயில் படுத்தலும் உவமம்
      ஒன்றுஇடத்து இருவர்க்கும் உரியபாற் கிளவி.

    இஃது ஒருசார் காமப்பொருண்மை பற்றித் தலைவன் மாட்டும்
தலைவிமாட்டும் நிகழ்வது ஒரு கூற்றுவழுவமைதி கூறுகின்றது.

    (இ-ள்) துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையும்
உடைய காமத்தைக் குறித்தமரபு இடையீடுபடுதலாலே, நகை முதலிய
மெய்ப்பாடு எட்டனுடைய கூறுபாடும் தோன்றப் பொருந்திய உறுப்பு
உடையது போலவும் உணர்வு உடையதுபோலவும் மறுத்து உரைப்பது
போலவும் கூறப்படும் செய்திகள் எல்லாம் தன் நெஞ்சொடு புணர்த்திச்
சொல்லியும், வார்த்தை சொல்லாத முறைமையை உடையன ஆகிய புள்ளும்
மாவும் மரனும் கடலும் கானலும் முதலியவற்றோடே அவை வார்த்தை

சொல்லுவனவாகப் பொருந்தி அவை செய்தல் ஆற்றாத
முறைமையைஉடைய தூதாகச்