அகத்திணையியல்--நூற்பா எண் 198735

செல

செல்லலும் வருதலும் உளபோலக் கூறுபவை போல்வன தொழில்களை
அவற்றின்மேலே ஏற்றிச் சொல்லியும், யாவர் சிலர் யாதொரு பிணிஉற்றார்
அவர் உற்ற பிணியைத் தாம் உற்ற பிணிபோலச் சேர்த்திச் சொல்லியும்,
அறிவையும் அறியப்படும் பொருளையும் தத்தம் நிலைமை ஒழிய வேறுபட
நிறுத்தி உவமப்பெயரும் உவமிக்கப்படும் பொருட்பெயரும், ஆகிய
இருவகைப்பட்ட பெயரும் தொழிலும் பண்பும் பயனும் ஆகிய
மூவகைப்பட்ட  பொருட்கு உரியவாக. உவமம் பொருந்துமிடத்து
உவமத்தின் வழியிலேபடுத்திச் சொல்லுதலும், தலைமகற்கும் தலைமகட்கும்
உரிய இலக்கணத்தின் பக்கக் கூற்றாம் என்றவாறு.

‘இடை தெரிய’ என்பதனை,

-இன்பம்


       இடைதெரிந்(து) இன்னாமை நோக்கி மனையா(று)
      அடை(வு)ஒழிந்தார் ஆன்றமைந் தார்

நாலடி. 54

என்றாற் போலக்கொள்க. ‘தெரிய’ என்னும் செய என் எச்சம்
ஏதுப்பொருண்மை குறித்து நின்றது. ‘அவர்அவர்’ என உயர்திணைப்
பன்மையாகக் கூறினும், இருதிணை ஐம்பாலும் கொள்ளப்படும்;

     ‘ஒருபால் கிளவி எனைப்பாற் கண்ணும்
     வருவன தாமே வழக்கென மொழிப.’

தொல். பொ. 218


என்ப ஆகலின்.

‘ஒன்றிடத்து உவமம்’ என்றதனை உவமம் ஒன்றிடத்து என்று மாறுக.
 

வரலாறு:


       கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
      பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித்
      தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ