736இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

      நாணொடு மிடைந்த கற்பின் வாள்நுதல்
     அந்தீங் கிளவிக் குறுமகள்
     மென்றோள் பெறல்நசைஇச் சென்றஎன் நெஞ்சே.


அகநா. 9

     இஃது உவமை பற்றி நெஞ்சினை உறுப்புடையது போலக் கூறிய தலைவன் கூற்று.

      உள்ளம் பிணிகொண் டோள்வயின் நெஞ்சம்
      செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்.

 நற். 284


     இஃது இளிவரல் பற்றி நெஞ்சினை உணர்வு உடையது போலக் கூறிய
தலைவன் கூற்று.

      அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
      நீஎமக் காகா தது.

குறள். 1291


     இஃது இளிவரல் பற்றி நெஞ்சினை மறுத்து உரைப்பது போலக் கூறிய
தலைவி கூற்று.

       கானலும் கழறாது கழியும் கூறாது
      தேன்இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது
      ஒருநீ அல்லது உறுதியாதும் இலனே
      இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
      கமழ்இதழ் நாற்றம் அமிழ்துஎன நசைஇத்
      தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து
      பறைஇக் கிளரும் துறைவனை நீயே
      சொல்லல் வேண்டுமால் அலவ!

அகநா. 170

     இஃது அழுகைபற்றிச் சொல்லா மரபினவற்றொடு கெழீஇச் செய்யா
மரபின் தொழில்படுத்துக் கூறிய தலைவிகூற்று.

     பாய்திரை பாடுஓவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
    தூஅறத் துறந்தனன் துறைவன்என்று அவன்திறம்