நோய்தெற உழப்பார்கண்
இமிழ்தியோ எம்போலக்
காதல்செய்து அகன்றாரை உடையை
யோ நீ. கலி. 129
இஃது அவர்அவர் உறுபிணி தமபோலச் சேர்த்திய தலைவி கூற்று.
ஓங்கெழில் கொம்பர் நடுஇது எனப்புல்லும்
காந்தட்கு இவரும் கருவிளம் பூக்கொள்ளும்
மாந்தளிர் கையில் தடவரும் மாமயில்
பூம்பொழில் நோங்கிப் புகுவன பின்செலும்
தோள்எனச் சென்று துளங்குஒளி வேய்தொடும்
நீள்கதுப்பு இஃதுஎன நீர்அற லுட்புகும்
வாள்ஒளி முல்லை முகையை முறுவல்என்று
ஆள்வலி மிக்கான் அஃது அறி கல்லான்.
தொல். பொ. 194. உரை-எடு
இஃது அறிவும் புலனும் வேறுபட நிறீஇ உவம வாயில் படுத்துக்
கூறியது.
இதனுள் இடையும் கையும் முதலாகிய உறுப்புக்களைப் பற்றி
உவமவாயில்படுத்து அறியும் அறிவையும் அறியப்படும் பொருளையும்
வேறுபட நிறுத்தி உவமம் பொருந்தியவழிக் கூறியவாறு காண்க. வேயைத்
தோள் போலும் என்னாது தோள் என்று தொட்டமையான் அறியப்படும்
பொருள் வேறுபட்டது. அதனைத் திரியக் காண்டலான் அறிவு வேறுபட்டது.
பித்தும் களியும் போல முலை எனச் சென்று வேயைத் தொடும் என்னாது
தோள் எனச் சென்று வேயைத் தொடும் என்னாது தோள் எனச் சென்று
வேயைத் தொடும் என்றமையான், உவமம் ஒன்றியவழி உவமவாயில்
படுத்தது. ஏனையவற்றிற்கு இலக்கியம் வந்துழிக் காண்க. ஈண்டு உரைப்பின்
பெருகும்.
198
விளக்கம்
இத் தொல்காப்பியப் பொருட்படல 194ஆம் நூற்பாவிற்கு
உரையாசிரியர்
உரைத்த உரையும் காட்டிய எடுத்துக் காட்டுக்களும் இவரால்
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. |