அகத்திணையியல்--நூற்பா எண் 198743

அன
 

அன்றிப் பிறிதொன்றை உபமேயமாகக் கருதாமையின் காமவேறுபாடு பித்தும்
களியும் உண்டாக்கவில்லை என்பதும் உணரப்படும்.
 

ஒத்த நூற்பாக்கள்


      முழுதும்:-                       
தொல். பொ. 196 நச்.


      ‘ஒருசிறை நெஞ்சமொடு உசாவுங் காலை
      உரியது ஆகலும் உண்டுஎன மொழிப.’


தொல். பொ. 204


     ‘ஞாயிறு திங்கள் அறிவே நாணே1
     கடலே கானல் விலங்கே மரனே
     புலம்புஉறு பொழுதே புள்ளே நெஞ்சே
     அவைஅல பிறவும் நுவலிய நெறியான்
     சொல்லுந போலவும் கேட்குந போலவும்
     சொல்லியாங்கு அமையும் என்மனார

 புலவர்.’ 512


     ‘நெஞ்சும் நாணும் நிறைசேர் அறிவும்
     செஞ்சுடர்ப் பருதியும் திங்களும் மாலையும்
     புள்ளும் மாவும் புணரியும் கானலும்
     உள்ளுறுத்து இயன்றவும் ஒழிந்தவை பிறவும்
     தன்சொல் கேட்குந போலவும் தனக்குஅவை
     இன்சொல் சொல்லுந போலவும் ஏவல்
     செய்குந போலவும் தேற்றுந போலவும்
     மொய்குழல் கிழத்தி மொழிந்தாங்கு அமையும்.’

ந. அ. 223
198


கனவு நிகழிடன்


 571 கனவும் உரித்தால் அவ்விடத் தான.

    இது மேற் கூறிய நிலைமை கனவின்கண்ணும் நிகழும் எனக் கூற்று
வழுவமைதி கூறுகின்றது.

    (இ-ள்) மேற்கூறியவாற்றான் காமம் இடையீடுபட்டுழிக் கனாக்
காண்டலும் உரித்து என்றவாறு.