744இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

வரல
 

வரலாறு:
 

     இன்னகை இனையம் ஆகவும் எம்வயின்
     ஊடல் யாங்குவந் தன்றென யாழநின்
     கோடுஏந்து புருவமொடு குவவுநுதல் நீவி
     நறுங்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
     வறுங்கை காட்டிய வாய்அல் கனவின்
     ஏற்றுஏக் கற்ற அலமரல்
     போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே,

அகநா. 39

இது தலைவன் கனாக்கண்டு கூறியது.

      கேட்டிசின் வாழி தோழி அல்கல்
     பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
     வாய்த்தகை பொய்க்கனா மருட்ட ஏற்றுஎழுந்து
     அமளி தைவந் தனனே குவளை
     வண்டுபடு மலரின் சாஅய்த்
     தமியேன் மன்ற அளியேன் யானே.

குறுந். 30

இது தலைவி கனாக்கண்டு கூறியது.

199

 

விளக்கம்


    இது தொல்காப்பியப் பொருட்படல 195-ஆம் நூற்பாவாக, இதற்கு
உரையாசிரியர் உரையே எடுத்துக்காட்டுக்களுடன் கொள்ளப்பட்டுள்ளது.

    காமம் இடையீடுபட்டஇடத்துக் கனாக் காண்டல் தலைவன் தலைவி
இருவருக்கும் உரித்து.

    ‘இன்னகை இனையம்’-

     பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக்கண்டு சொல்லிய
 ‘ஒழித்தது பழித்த நெஞ்சமொடு’ என்ற அகப்பாடலில் ‘பிரிந்த காலத்தில்
எம்மை நீர் நினைத்ததும் உண்டோ?’ என்று வினவிய தலைவிக்கு
விடைகூறும் தலைவன் தான் தலைவிபற்றியே கனாக்கண்ட நிலையைச்
சொற்றது இப்பகுதி.