அகத்திணையியல்--நூற்பா எண் 199,200745

செல
 

    செல்லுதல் அரிய வழியில் யான் இரவிடைப் படுத்துக்
கண்ணுறங்கினேனாக, நீ தோன்றி வளையல்களைச் செறித்துக் கொண்டு
தாழ்ந்த பார்வையோடு நிலத்தைக் கால்விரலால் கீண்டியவாறு நின்றாயாக,
உன்னைக்கண்டு ‘இனிய நகையினை உடையாய்! உன்னிடம் யான்
இத்தகைய அன்பினேன் ஆகவும், என்னிடம் ஊடல் கொள்ளக் காரணம்
என்ன" என்று வினவி, உன் புருவத்தையும் நெற்றியையும் தடவிக்கொடுத்து
நறிய தலைமயிரைக்கோதிய நேரத்தில் யான் கண்டது பொய்யாம்படிக்
கண்ணைத் திறக்கவே அந்நிகழ்ச்சி மறைந்ததாக, அக்கனவை உட்கொண்டு,
யான் பட்ட துயரை நீ அறிந்திலையாதலின், என்மாட்டு வெகுளுகின்றாய்"
என்று பிரிவின்கண் கனவு கண்டவாற்றைத் தலைவன் கூறினான்.

‘கேட்டிசின்’-

     ‘தோழி! நேற்று இரவு நம் தலைவன் என்னைத் தழுவினானாக,
உண்மையைப் போன்ற அக்கனவினை மெய்யாகக் கருதிக் கண்விழித்து என்
படுக்கையைத் தடவினேனாக, வண்டு கிண்டிய குவளைமலர் போல அழகு
கெட்டுத் தனியளாகிய யான் இரங்கத்தக்கவள் ஆயினேன்’ என்று காமம்
இடையீடுபட்டவழித் தலைவி கனாக்கண்டதைத் தோழியிடம் கூறியவாறு.


ஒத்த நூற்பா

    ‘முழுதும்’--                        
 தொ. பொ. 197 நச்.

 

199

தாமே கூறிக் கோடல்


572   எம்முறை யோரும் யாரொடும் இன்றித்
      தம்மொடு தாமே சாற்றியும் அமைவர்.
94