இது கூற்றிற்கு உரியார்
அனைவர்க்கும் ஆவது ஒரு மரபு கூறுகின்றது.
(இ-ள்) மேல் சொல்லப்பட்ட தலைவன் முதலாகிய அனைவரும்
தாம்தாம்
கூறப்படுவோர் எவரோடும் கூறாது தம்மொடு தாமே கூறியும்
அமைவர்
என்றவாறு.
உம்மையால், அங்ஙனம் அமைதல் சிறுபான்மை என்று உணர்க.
200
விளக்கம்
தம்மொடு தாமே கூறிக் கொள்வதால் பயன் ‘மூடி வேவாநின்ற
அக்கலத்தை
மூய் திறந்தஇடத்து அகத்து நின்ற வெப்பம் குறைபடும்;
அதுபோல அச்சொற்களைப் புறப்படுத்தலான் இவர்க்கும் அயா உயிர்ப்பாம்
என்பது.’
(இறை. அக. 30.)
ஒத்த நூற்பா
முழுதும்-
ந. அ. 224
200
கேட் போர் திறம்
573 இறையோன் கூற்றும் இறைவி கூற்றும்
மறையோர் முதலாப் பதின்மரும் முறையான்
மறையோன் கூற்றும் அறிஞர் கூற்றும்
இறையோன் முதலா எனைவரும் கேட்ப.
இது நான்காம் எண்ணும் முறைமைக்கண் நின்ற கேட்போர் இவர் என
வரையறுத்து உணர்த்துகின்றது.
(இ-ள்) தலைவன் கூற்றும் தலைவி கூற்றும் பார்ப்பான் முதலாகிய
பதின்மரும், முறையானே பார்ப்பான் கூற்றும் அறிஞர் கூற்றும் தலைமகன்
முதலாகிய எல்லாரும் கேட்பர் என்றவாறு. |