அகத்திணையியல்--நூற்பா எண் 201.202747

 

தலைவன் கூற்றும் தலைவி கூற்றும் தாம் கேட்டல் விதந்து ஓதல்
வேண்டுவதன்று, அவை தம் கூற்றாகலான் என்க.

       ‘முறை’ என்ற மிகையானே,

       ‘ஊர்க பாக ஒருவினை கழிய’

அகநா. 44

எனத் தலைமகன் கூறப் பாகன் கேட்டலும் கொள்க. 201
 

ஒத்த நூற்பாக்கள்
 

       ‘மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்
       நினையுங் காலைக் கேட்குநர் அவரே.’

தொல். பொ. 508

       ‘பார்ப்பார் அறிவர் என்றுஇவர் கிளவி
       யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.’

 தொல். பொ. 509


     முழுதும்--                            ந. அ. 225, 226

201


இடத்து இயல்


574    ஒருநெறிப் பட்டாங்கு ஓர்இயல் முடியும்
       கரும நிகழ்ச்சி இடம்என மொழிப.


    இஃது ஐந்தாம் எண்ணும் முறைமைக்கண் நின்ற இடம் இவ்வியல்பிற்று
என்கின்றது.

    (இ-ள்) பலவும் ஒருவழிப்பட்டு ஓர் இலக்கணத்தான் முடியும்
கருமநிகழ்ச்சி இடம் என்று கூறப்படும் என்றவாறு.

     ஒரு செய்யுள் கேட்டான் இஃது இன்ன இடத்து நிகழ்ந்தது என்று
அறிதற்கு ஏதுவாயதோர் உறுப்பினை இடம் என்றார் என்பது. இடம்
எனினும், களம் எனினும் ஒக்கும். ஒரு நெறிப்படுதல் என்பது ஒருவழிப்
பலவும் தொகுத்தல். ஓர்இயல் என்பது அவற்றுக்கெல்லாம் இலக்கணம்
ஒன்றாதல்.