இடம் என்பது ஒருசெயல் நிகழும்
சந்தர்ப்பம்.
நிலம் என்பது முல்லை முதலாக ஐவகைப்படுவது.
இடம் வேறு, நிலம் வேறு என்பதனை,
‘ஏழாகுவதே,
கண்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே.’
தொல்.சொல். 81
என்ற நூற்பாவில் இடமும் நிலமும் வேறுவேறாகக் கூறப்பட்டதனானும்
அறியலாம்.
நிலம் என்பது முதற்பொருளின் ஒரு கூறாய்த் திணைதோறும்
வேறுபட்டுவரும் உலகப் பாகுபாடாம்.
இயற்கைப்புணர்ச்சி ஓர் இடம். அதன்கண் இரந்து பின்நிற்றற்கு
எண்ணல்
முதலிய பலவகைச் செயல்களும் அடக்கப்படுமாற்றை அந்நூற்பாத்
துறைவிரி
பற்றிக் கூறலான் முன்பே கண்டுள்ளனம்.
முன் என்பது ஈண்டுக் காலமுன்.
ஒத்த நூற்பா
முழுதும்--
தொல். பொ. 513. பே.
‘நெறிப்படு கருமம் நிகழ்வுழி இடனே.’
ந அ. 227
202
காலத்தின் இயல்
575 இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்துஇயல் மருங்கின் தெரிந்தனர் உணரப்
பொருள்நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்.
இஃது ஆறாம் எண்ணும் முறைமைக்கண் நின்ற காலம்
இவ்வியல்பிற்றுஎன்கின்றது. |