(இ-ள்) இறந்த காலமும் நிகழ்காலமும்
எதிர்காலமும் என்னும்
கூறுபாட்டான்
நிகழும் பக்கத்தின் ஆராய்ந்து புலனாமாறு செய்யுளுள்
தோன்றப்
பொருள்நிகழ்ச்சியைக் கூறுவது காலம் என்னும் உறுப்பாம்
என்றவாறு.
பொருள் நிகழ்ச்சியைக் காலம் என்றது என்னை, காலம் என
வேறுபொருள்
இல்லதுபோல எனின், அஃது ஈண்டு ஆராய்ச்சியின்று;
நியாயநூல்
ஆராய்ச்சி என்க.
‘வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே’
குறுந். 7
என்னும் பாட்டினுள்
வில்லோனும் தொடியோளும் பொருள்
எனப்படும்.
‘வேய்பயில் அழுவம் முன்னியோர்’
குறுந். 7
என்பது, அப்பொருள் நிகழ்ச்சியான் இறந்தகாலம் எனப்படும்.
அப்பாட்டிற்குச் சிறந்தார் அவராகலின், அவரே பொருள் ஆயினார்
என்பது.
‘மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே’
குறுந். 71
என்பது நிகழ்காலமும்,
‘பகலும் பெறுவைஇவள் தடமென் தோளே’
கலி. 49
என்பது எதிர்காலமும் எனப்படும்,
அவ்வப் பொருள் நிகழ்ச்சியான்
என்று உணர்க.
புறத்திற்கும் இவ்வாறே இன்றியமையாது என்பது. பெரும்பொழுது
சிறுபொழுது என்பன ஈண்டுத் திணை எனப்பட்டு அடங்கின; என்னை?
முதலும் கருவும் உரிப்பொருளும் கூட்டித் திணை ஆகலின்.
203 |