அகத்திணையியல்--நூற்பா எண் 203,204751

 

விளக்கம்


      காலம் பொருள் நிகழ்ச்சியை உரைப்பது-

      வினையாவது ஒரு பொருளின் புடைபெயர்ச்சி.

     அப்பொருளின் புடைபெயர்ச்சி நிகழ்ந்த-நிகழ்கின்றநிகழுமாற்றை
உரைப்பது காலமாகும். தனியே காலம் என்பதுஒன்றனை விளக்குதல்
இயலாது. ஒரு பொருளின் தொழிலொடு படுத்தே காலத்தை உணர்த்துதல்

வேண்டும். இது பற்றியே வினைச்சொல் காலத்தொடு வரும் என்று
கூறப்பட்டது.

    ‘வில்லோன் காலன்’-


         வில்லோனும் தொடியோளும் பொருள்.

முன்னுதல்-தொழில்.


     முன்னியோர் எனத் தொழிலொடுபடுத்து இறந்தகாலம்

உணர்த்தப்பட்டவாறு.

     பெரும்பொழுது சிறுபொழுது என்பன முதற்பொருளின் கூறுகளாய்த்
திணையுள் அடங்கும். உரை முழுதும் பேராசிரியர் உரையே.
 

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்--                        
தொல். பொ. 514 பே.


     ‘சென்றது நிகழ்வது எதிர்வது எனமுறை
      நின்று பொருள்உரை நிகழ்வது காலம்.’

ந. அ. 228

203


பயன் என்பதன் இயல்


576    இதுநனி பயக்கும் இதனான் என்னும்
       தொகைநிலைக் கிளவி பயன்எனப் படுமே.